2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கைம்பெண்களுக்கு சுயதொழில் முயற்சிக்கான நிதியுதவிகள்

Sudharshini   / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராங்களைச் சேர்ந்த கைம்பெண்கள் சுயதொழில் மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு காசோலைகள் சனிக்கிழமை (24) பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.


கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ், கைம்பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சுயதொழில் முயற்சிக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இத்திட்டத்துக்கமைய கோழி வளர்ப்பு மற்றும் சிறு கைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் இருவருக்கு தலா 30,000 ரூபாவுக்கான காசோலைகள் மானிய அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ். சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.அன்வர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எம்.ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X