2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஜாஹித்


கல்லோயா குடியேற்ற திட்டத்திலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுத்தல், சேதனப் பசளையை பயன்படுத்தி பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (09) நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதன்போது அம்பாறை மாவட்டத்தில் சுத்தமான குடிநீரின்றியும் இரசாயனம் கலந்த குடிநீர் பாவனையாலும் சுமார் 40 - 60 சதவிகிதமானோர் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.


எதிர்காலத்தில் இந்நிலைமையை குறைக்கும் நோக்குடன் கல்லோயா குடியேற்ற திட்டத்திலுள்ள பெருமளவிலான மக்கள் குடிநீரை பெறும் வகையில் எம்-40ஆம் இலக்க வாய்க்கால் அருகில் நிழல் மற்றும் பயன்தரு மரங்கள் நடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


வீடுகள், பொது இடங்களிலுள்ள கிணறுகளை பாதுகாப்பான கிணறுகளாக மாற்றி அதனைச் சுற்றியும் நிழல் மற்றும் பயன்தரு மரங்கள் நடப்படவுள்ளன.


இத்திட்டத்தை கல்லோயா குடியேற்ற திட்டத்திலுள்ள மக்களின் நன்மை கருதி நியோன் இன்டஸ்ரீஸ் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.


நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நியோன் இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கமல் மல்வாணி, அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் என்.ஹேரத், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.இராஜதுரை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .