2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கள விஜயம்...

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா


அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் செலவு மதிப்பீடுகளை ஆராய்வதற்கும் அதற்கான வரைபடங்களைத் தயாரிப்பதற்கும் ஏதுவான கள விஜயம் திங்கட்கிழமை(9) நடைபெற்றது.


கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இக்குழுவில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.ராஜநாயகம், அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் எம்.சோமசிறி, உதவிப் பணிப்பாளர் சந்தன, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா உட்பட துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்வதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த  விளையாட்டு மைதானம், கோணாவத்தை ஆறு, கடற்கரைப் பூங்கா, பிரதேச சபையின் புதிய கட்டட வளாகம் போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்த குழுவினர் இடங்களைப் பார்வையிட்டனர்.


இங்கு மக்களுக்கு பாதிப்பில்லாமல் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னடுப்பதற்கான வரைபடங்களைத் தயாரித்து செயற்பாடுமாறும் மாகாண பணிப்பாளரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆலோசனை வழங்கினார்.


நகர அபிவிருத்தி நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியே இந்தக் கள விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X