Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் 10 அம்ச பிரச்சினைகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தி;ன் கீழ் தீர்வு பெற்றுத்தருமாறு கோரி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.எ.மஜிதினால் ஓப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
01.அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்பு திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது. இதுவரை அந்த வீடுகள் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனை உரியவர்களுக்கு வழங்க ஆவனை செய்தல்.
02.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்கள் வாழ்ந்து வருகின்ற நற்பிட்டிமுனை கரவாகுப்பற்று வைத்தியசாலையை தரம் உயர்த்துதல்.
03.மட்டகளப்பிலிருந்து பொத்துவில் வரையான ரயில்பாதை போக்குவரத்தை ஆரம்பித்தல். இத்திட்டமானது, ஈரான் அரசினால் ஆய்வறிக்கை செய்யப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை நடைமுறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
04.கல்முனைத் தொகுதியில் மிக நீண்ட காலப் பிரச்சினையாக காணப்படும் கிட்டங்கி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை மேற் கொள்ளல்.
05.பொத்தவில் தொகுதியிலுள்ள வட்டமடு விவசாயிகளின் நீண்ட கால காணிப்பிரச்சினை சம்மந்தமான பிரச்சினைக்கு தீரிவு காணல்.
06.தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு தொகுதிக்கு 300 வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சகல இனமக்களும் இடம்பெறக் கூடியதாக அவ்வீடமைப்புத் திட்டம் அமைய நடவடிக்கை மேற்கொள்ளல்.
07.அம்பாறை மாவட்டதில் சினிக் கூட்டுத்தாபனத்தினால் சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளுக்கு பதிலாக உரியவர்களுக்கு மாற்றுக் காணி வழங்க ஆவண செய்தல்.
08.நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் இனக்கலவரம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் காணிகளை உரியவர்களக்கு பெற்றுக் கொடுக்க ஆவண செய்தல்.
09.மாகாண சபைகளில் முஸ்லிம் ஒருவருக்கும் ஆளுநர் பதவி வழங்குதல்.
10.தென்கிழக்குப் பலகலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்க ஆவண செய்தல். போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை மெற்கொள்ளுமாறு மேற்படி மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், மற்றும் சூறா கவுன்சில் தலைவர், முஸ்லிம் கவுன்சில் தலைவர், அகில இலங்கை ஜெம்மியத்துல் தலைவர் உலமா சபை ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago