2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் பெரிய வெங்காயச் செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் கலந்துரையாடல் நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தம்புள்ள மிற் கன்றி விவசாயிகள் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர்களான எச்.எம்.எம்.கீர்த்திபண்டார, வில்சன் கருணாதிலன, அபேவிக்கிரம மற்றும் வில்சன் சூரியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டம் பற்றி தெளிவுபடுத்தினர்.

2015ஆம் ஆண்டு, சிறு மற்றும் கால போகங்களில் உலர் வலயத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X