2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

துறைமுக நிர்மாணிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்களுக்கு நஷ்டஈடு: அர்ஜூன

Gavitha   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்  


ஒலுவில் துறைமுக நிர்மாணிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்களுக்கான முழுமையான நஷ்டஈடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மாற்றுத்தொழில் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்வேன் என கப்பல் துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.


ஒலுவில் துறைமுகத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் செய்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம் துறைமுக நிர்மாணிப்பினால் பாதிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரர்கள் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன். இந்த துறைமுகம் இரண்டு பகுதியாக நிர்ணிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய அளவில் மீன்பிடித் துறைமுகம் மீனவர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அதிலும் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்வதோடு, இதனுடன் இணைந்ததாக காணப்படும் வர்த்தக துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்து பிராந்தியததின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவேன் என்று தெரிவித்தார்.


இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூரநோக்குடன் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.  அவருடன் சேர்ந்து இவ்வாறான பணிகளை முன்னெடுப்பதற்கு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சரியாகச் செய்வதற்கு இவ்வாறான விஜயங்களை மேற்கொண்டு மக்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்லவுள்ளேன்.


இத்துறைமுகத்தின் ஊடாக இப்பிராந்தியத்தின் பொருளாதாரம் எதிர்காலத்தில் வளர்ச்சியடையவுள்ளது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X