2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஆலையடிவேம்பு த.தே.கூ வேட்பாளராக கவீந்திரன் தெரிவு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

2015 ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச வேட்பாளராக போட்டியிடுவதற்கு கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவாகியுள்ளார்.

தழிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரை தெரிவு செய்யும் கூட்டம், ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் இரத்தினவேல் மற்றும் உறுப்பினரான காளிதாசன், பொதுமக்கள் மற்றும் பிரதேச தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போதே கவீந்திரன் கோடீஸ்வரள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலையடிவேம்பு பிரதேச தழிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக மக்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X