2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய கிணறுகள் கையளிப்பு

Gavitha   / 2015 பெப்ரவரி 18 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குநார கிராமத்தில் பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா நிறுவனத்தினால் (ஜெஸ்கா) ரூபாய் 02 இலட்சம் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு புதன்கிழமை (18) மக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மக்கள், இது வரை காலமும் குடிநீருக்காக பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்ததாக மக்கள் தெரிவித்தனர். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு மூலம் 50 குடும்பங்கள் நன்மையடையவுள்ளது.

புதிய குடிநீர் கிணற்றை பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம் ஹாஸீம் (சூரி) தமண தரி தர்ம ராஜ விகாரதிபதி கோமந்த கிமி ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தனர்.

இக்குடிநீர் கிணறு நிர்மாணிக்கப்பட்டமைக்காக, பொது மக்கள் பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா நிறுவனத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X