2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எல்.எம். ஜெமீல் இன்று சனிக்கிழமை (21) தெரிவித்தார்.


அண்மைக் காலமாக அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதாக அவர் கூறினார்.


வீதி விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் இடங்களை அடையாளம் கண்டு சமிஞ்சை பலகைகள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகனச் சாரதிகளும் பொதுமக்களும் வீதி போக்குவரத்து சமிஞ்சைகள் மற்றும் சட்ட திட்டங்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படுமெனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும்; தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X