2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'அரசாங்க உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்'

Kogilavani   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா


'அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்'  என அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.


அரசாங்கத்தின் 100 நாள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டம் தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு புதன்கிழமை(25) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


'பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நாம், மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். அப்போதுதான் மக்களிடத்தில் நன் மதிப்பை பெற முடியும்.


அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு உங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.


எதிர்வரும் காலங்களில் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை மக்களின் காலடிக்கு கொண்டு செல்லுவது அரச அதிகாரிகளின் கடமையாகும்.


எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு சகல அதிகாரிகளும் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.


இச்செயலமர்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான், உதவி திட்டமிடல் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹஸன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X