Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 02 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கான நாடாளுமன்ற பிரதிநித்துவத்தையும் அரசியல் அதிகாரத்தினையும் இழக்க நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு என்ற சுயற்சைக்குழுவின் நிர்வாகி எம்.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் மூலம் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பாக சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தின் எம்.எச்.எம்.அஷ;ரப் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர், 50 வருடகாலமாக தக்கவைக்கப்பட்டு வந்த நாடாளுமன்ற அரசியல் அதிகாரம் கடந்த ஒரு தசாப்பகாலமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறைத் தொகுதியில் சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் இருக்கின்றன. அதிலும் விஷேடமாக 55 ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் சம்மாந்துறையின் நகர்புரத்தில் இருந்தும், ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.
காலத்துக்கு காலம் வருகின்ற அரசியல் வியாபாரிகளின் கைபொம்மைகளாக மாறி, ஆளுக்கொரு கட்சியில் பிரிந்து நின்று எமது வாக்குகளை சிதறடித்து எங்கிருந்தோ வருபவர்களை நாடாளுமன்றம் அனுப்பிவிட்டு, நாம் வீதியோரங்களில் நின்று ஆளுக்கு ஆள் குற்றம் சாட்டிக்கொண்டிகின்றோம்.
இந்நிலையை மாற்றி ஒட்டு மொத்தமாக நாம் அனைவரும் எமது ஊரின் கட்டுக்கோப்பு மிக்க உயர் சபைகளான நம்பிக்கையாளர் சபை, உலமாசபை, மஜ்லிஸ் அஷ;ஷ_றா என்ற சபைகளின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம், கடந்த காலத்தில் செயற்பட்ட உள்ளூர் அரசியல் தலைமைகள் தவிர்ந்த, இந்த ஊரை நேசிக்கின்ற, நல்ல தக்வா உடைய எமது சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்க கூடிய ஒருவரை நாம் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும்.
இதனை நாம் ஒரு அரசியல் கட்சியின் மூலம் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்ற விடயமாக கடந்த சில தேர்தல் முடிவுகளும் ஏனைய பிரதேச மக்கள் எமக்கு வழங்கிய வாக்குகளையும் கொண்டு அறிந்துக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
எனவேதான் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஒரு சுயாதீன குழுவாக நின்று, எமது மண்ணுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வோம்.
அதைவிடுத்து மக்களுக்க நல்ல கருத்தை செல்ல விளைகின்றவர்களை விமர்சிப்பதையும் கூட்டங்கள் நடத்துவதை தடுத்து நிறுத்துவதையும் தவிர்த்து இந்த மார்கம் பிழையாக காணப்படின் வேறு எந்த வழியில் எமது மண்ணுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என ஆக்கபூர்வமாக கருத்துக்களை மக்கள் முன் தெளிவுப்படுத்துமாறும் இந்த ஊரின் அரசியல் தலைமைகளை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago