2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'வட, கிழக்கு தமிழர்கள் அதிகாரத்தை பெற்றவர்களாக மாற்றமடையும் வழிவகைகளை ஏற்படுத்தவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

வட,  கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இறைமையின் அடிப்படையில் சுயாட்சி பெற்று,  தங்களுடைய வாழ்க்கையை  தாங்களே நடத்தக்கூடிய அதிகாரத்தை பெற்றவர்களாக மாற்றம் அடைவதற்குரிய  வழிவகைகளை இந்த அரசு ஏற்படுத்தவேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்

காணாமல் போனோர்  தொடர்பான விடயங்களை ஆராயும் குழுவினரிடம் முறைப்பாடு செய்வது பற்றிய விழிப்புணர்வுக்கூட்டம்,  திருக்கோவிலுள்ள தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த காலத்தில் அம்;பாறை மாவட்டத்தில் கடத்தப்பட்டவர்கள்,  காணாமல் போனவர்கள் தொடர்பான நிலைமையை   அவர்களின்  உறவுகள் வெளியிடுவது தொடர்பில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்;கள்.   இதனால், பாதிக்கப்பட்ட அதிகமான தமிழர்கள் பொலிஸில் முறைப்பாடு  செய்யாமலும் இது தொடர்பான ஆவணங்களை  திரட்டாமலும் உள்ளதாக அறியமுடிகின்றது' என்றார்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை கண்டறிவதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறை மாவட்டத்துக்கு வருகைதரவுள்ளது. எனவே,  பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை தயார் செய்வதுடன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவிலிலுள்ள காரியாலத்துக்கு வருகைதந்து இது தொடர்பான விவரங்களை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்துடன்,  இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X