2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்கு படை எடுக்கும் நரிகள்

Freelancer   / 2025 ஒக்டோபர் 03 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலையின்   விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான நரிகள் சுற்றித் திரிவதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

நரிகள்  காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருவதாகவும், தற்போதைய சூழ்நிலை காரணமாக, குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூட முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பாடசாலைக்கு அருகில் சுற்றித் திரியும் நரிகளின் கூட்டத்தைப் பிடித்து, வேறு பொருத்தமான இடத்திற்கு கொண்டு சென்று விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாடசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X