Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மார்ச் 20 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் நிருவாகிகள் தெரிவு அக்கரைப்பற்று தலைமைக் காரியாலத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
அம்பாறை மாட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் ஏனைய அரசாங்க நிறுவனங்களிலும் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் நலன்கருதி கடந்த ஒரு வருட காலமாக இயங்கிவருகின்ற இவ்வமைப்பின் இவ்வாண்டிற்கான (2015) இடைக்கால நிருவாகிகள் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.
இதனடிப்படையில், தலைவராக கே.எம்.கபீர், செயலாளராக எஸ்.ஆப்தீன், பொருளாளராக ஐ.றனீஸ், உப தலைவராக ஏ.எஸ்.கே.சமரகோன், பிரதித்தலைவராக ஏ.சந்திரசேன உப செயலாளராக ஏ.எம்.எம்.அஜ்மீர் மற்றும் அமைப்பாளராக எல்.எம்.சர்ஜூன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன், ஏனைய நிருவாக உறுப்பினர்களாக 06 பேர் தெரிவு தெரிவுசெய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
- அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் முழுமையான சேம நலனில் அக்கறை செலுத்துதல்.
- அவர்கள் எதிர்கொள்ளும் நிருவாக ரீதியிலான பிரச்சினைகளை உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தீர்த்தல்.
- அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் மாதாந்த சம்பள அளவுத்திட்டம் மற்றும் ஏனைய அரச மானியங்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர்களுடன் சந்திப்பினை ஏற்படுத்துதல்.
- அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களது கொள்திறனை விருத்தி செய்யும் வகையிலான செயற்றிட்டங்களை அமுல்படுத்தல்.
- அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகள் மற்றும் அதனையொட்டிய திட்ட முன்னெடுப்புக்கள் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்குதல்.
இவ்வமைப்பு தொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன் கலந்துரையாட வேண்டுமானால் தினமும் காலை 07.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை 0756718788 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளவும். அத்துடன், kabeeham82@gmail.com, abdeen.sr@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
40 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025