2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சித்திரக் கண்காட்சி நிகழ்வுகள்

Kanagaraj   / 2015 மார்ச் 20 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா ஒலுவில் 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பீடங்களுக்கிடையிலான உள்ளக கலாசார மற்றும் சித்திரக் கண்காட்சி நிகழ்வுகள் இன்று (20) வெள்ளிக்கிழமை, ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி கூடம் மற்றும் கலாசார நிகழ்வுகளை அங்குராப்பணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் பல்கலைக்கழக அதிகாரிகள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சித்திர கண்காட்சி கூடங்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததோடு மூவின மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X