2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காட்டு யானைகளினால் தென்னை மரங்களுக்கு சேதம்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை மீலாத் நகர் கிராமத்துக்குள்  வெள்ளிக்கிழமை (20) இரவு காட்டு யானைகள் உட்புகுந்து பல தென்னை மரங்களுக்கு சேதம் விளைவித்து சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மீலாத் நகரிலுள்ள தோட்டக் காணிகளிலும் வயல் பிரதேசங்களிலும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இவ்வாறு நாசப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக மீலாத் நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் பல சேதங்களையும் விளைவித்து செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து மக்களையும், அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X