2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நடமாடும் சேவை

Thipaan   / 2015 மார்ச் 22 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில், திருக்கோவில் கலாசார மண்டபத்திலும் விநாயகபுரம் பல்தேவைக் கட்டடத்திலும்  இரண்டு நாள் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக திருக்கோவில் பிரதேச உதவிச் செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்தார்.

தம்பட்டை, தம்பிலுவில் திருக்கோவில் 1ஆம், 2ஆம், 3ஆம் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை கலாச்சார மண்டபத்தில் செவ்வாயக்கிழமை(24) நடைபெறவுள்ளது.

கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரம், தாண்டியடி, காஞ்சரம்குடா, விநாயகபுரம் முதலாம் பிரிவு தொடக்கம் நான்காம் பிரிவுவரையிலான பிரதேச மக்களுக்கான நடமாடும் சேவை விநாயகபுரம் பல்தேவைக் கட்டடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை(27)  இடம்பெறவுள்ளது.

இதில், பொலிஸ் திணைக்களம், பதிவாளர் திணைக்களம், காணிப்பதிவு திணைக்களம், சமூகசேவை திணைக்களம் போன்ற திணைக்களங்களின் சேவைகளான காலம் கடந்த பிறப்பு, இறப்பு, திருமணப்பதிவு, கடவுச்சீட்டு, அடையாளஅட்டை,  காணிப்பிரச்சனை,  பொலிஸ்முறைப்பாடு, போன்றவை இடம்பெறவுள்ளதாக என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X