2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

151ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

Thipaan   / 2015 மார்ச் 22 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 151ஆவது பொலிஸ் வீரர்கள் தினம், அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில்,  அந்தந்த பிரதேச பொலிஸ் பிரிவுகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.

திருக்கோவில் பொலிஸாரின் ஏற்பாட்டில், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.யு.வி.தென்னக்கோன் தலைமையில், திருக்கோவில் ஸ்ரீ சித்தரவேலாயுத ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம் ஜெமில் தலைமையில், பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பொலிஸ் வீரர்களின் நினைவு தூபியில் விளக்கு ஏற்றப்பட்டு நினைவு கூரப்பட்டது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X