2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு  செய்யப்பட்ட மகளிருக்கான வீடமைப்பு சான்றிதழ் வழங்குதலும் மகளிர் கௌரவிப்பும் நேற்று மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, விசேட விடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட 6பேருக்கு விடமைப்பு   சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், பிரிவு ரீதியாக இனம்கானப்பட்ட 31 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

திவிநெகும முகாமைதுவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திவிநெகும பிரதேச அதிகாரி எ.ஆர்.எம்.சாலிஹ், திவிநெகும திட்ட முகாமையாளர் எ.சி.அன்வர், மேலதிக மாவட்ட பதிவாளர் எஸ்.சைலஜா, திவிநெகும  முகாமையாளர்களான எஸ்.சதீஸ், எம்.எம்.எம். முபீன், அலுவலக அதிகாரி பி. மாஜிதா, கலாசார உதவியாளர் எஸ்.அகிலா வானு, திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகதர் என்.எம்.நௌவ்சாத் ஆகியோர்; உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X