Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மார்ச் 25 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேச தபாற்கந்தோரை செவ்வாய்க்கிழமை (24) இரவு உடைத்து 20 ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பாறை குற்றப்புலானாய்வுப் பிரிவினர் அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருவதனால் புதன்கிழமை (25) தபாற்கந்தோரின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன.
இதனால் இப்பிரதேச மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். மறைப்பு சுவர்களுக்குப் பதிலாக கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இத்தபாற்கந்தோரினது கண்ணாடியை கற்களைக் கொண்டு உடைத்து திருடன் உள்ளே சென்றுள்ளான்.
எனினும், 20 ரூபாய் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களோ கோவைகளோ எதுவும் திருடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக் கொள்ளைச் சம்பவத்தினையடுத்து பிராந்திய அஞ்சல் அதிகாரி, சம்பவ இடத்துக்கு உடன் வருகை தந்து நிலைமையை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரை பணித்தார்.
40 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025