Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 25 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகளிடமும் சம்மாந்துறை பிரதேசத்தின் அரசியல்வாதிகளிடமும் பிரதேச மக்கள் முன்வைத்துள்னர்.
'சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து வரும் பிரதான வைத்தியசாலையாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.
1923ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஐ. அன்வர் இஸ்மாயிலின் பெரும் முயற்சியின் பயனாக 2007ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த வைத்தியசாலையில் தினமும் வெளிநோயாளர்; பிரிவில் 600- 700 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு விசேட வைத்தியர்கள் நான்கு பேரும் சாதாரண வைத்தியர்கள் 20 பேரும் தாதியர்கள் 52 பேரும் சேவையாற்றி வருகின்றனர்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ வசதியை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த பிரதேச மக்கள் அவசர சிகிச்சைக்காக அம்பாறை மட்டக்களப்பு மற்றும் கல்முனை போன்ற தூர இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளதால் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆளணி போதாமையால் பொதுமக்களுக்கு சீராக சிகிச்சை அளிக்க முடியாத இக்கட்டான நிலையில் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது.
கிட்டத்தட்ட இதே வராலாறுகளை கொண்ட அம்பாறை வைத்தியசாலை தற்போது பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்துடன் இணைப்பதன் மூலமாகத்தான் வைத்தியசாலை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும். இதற்கான இடவசதியும் முதன்மை திட்டங்களும் இந்த வைத்தியசாலையில் காணப்படுகின்றன' என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago