2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வாழ்வாதார உதவிகள்

Gavitha   / 2015 மார்ச் 25 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆலய முன்றலில் புதன்கிழமை (25)  இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்;த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத்தலைவர் எம்.நௌஷாட் மஹ்றுப் அனுசரணையோடு இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதேச செயலாளர் தனது பாரியாரோடு இணைந்து முதலாவது பயனாளிக்கான வாழ்வாதார உதவிகள் அடங்கிய பொதியினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகஸ்தர் கே.தர்மதாச, பிரதேச திவிநெகும உத்தியோகஸ்தர் கே.நேசராஜா, முகாமைத்துவப் பணிப்பாளர்  த.பரமானந்தம், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ச.சசீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X