2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மகளிருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2015 மார்ச் 27 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்

மகளிர் தினத்தையொட்டி பொத்துவில் பிரதேச செயலகத்தில் மகளிர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை(25) இடம்பெற்றது.

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பொத்துவில் பிரதேசத்துக்குட்பட்ட பெண்கள் அபிவிருத்திச் சங்கங்கள், பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கங்கள் உட்பட பல்வேறு துறைசார் பெண்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, பெண்களுக்கான திறன் விருத்தி தொடர்பான வழிகாட்டல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடததுக்கான சிறப்பு மகளிர்களுக்கான பாராட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X