2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'பாதுகாப்பான சிறுவர் உலகம்'

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் 'பாதுகாப்பான சிறுவர் உலகம்' எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.

சென் ஜோன் அம்பியுலன்ஸ் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் அனுசரணையில், அல் ஹிக்மா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச். அப்தல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  உதவிப்பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாகவும் சென் ஜோன் அம்பியுலன்ஸ் உத்தியோகஸ்தர் அன்டெனிஸ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எச்.றிபாஸ் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளநல ஆலோசகர் ஏ. மனூஸ் வளவாளராகக் கலந்து கொண்டு சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இக்கருத்தரங்கில் மாணவர்கள் உடல், உள ரீதியாக எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் புறக்கணிப்பு, சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்படல், சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படல் போன்ற சிறுவர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X