2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமை குறித்து மகஜர்

Thipaan   / 2015 மார்ச் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரச கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமை குறித்து,  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி. வணிகசிங்கவிடம் வெள்ளிக்கிழமை (27)  மகஜர்  கையளிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினர் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீரினால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வைத்து மகஜர் கையளிக்கப்பட்டது.

நாடாளாவிய ரீதியில் அரசாங்க கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மோட்டார் சைக்கிள்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரச கள உத்தியோகத்தர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறையில் சில கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கே இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய உத்தியோகத்தர்கள் எவருக்கும்; இன்னும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.
அத்தோடு, சைக்கிள்களைப் பெறுவதற்காக பல மாதங்களுக்கு முன்னர் கட்டுப்பணம் செலுத்திய சில உத்தியோகத்தர்கள் தங்களது பணத்தினை ஏமாற்றத்துடன் திருப்பிப் பெற்றுள்ளனர்.

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பான தேசிய ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றில், அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த பெரும்பாலான அரசாங்க உத்தியோகத்தர்கள் மாத்திரம் இவ்விடயத்தில் நீண்ட நாட்களாக புறக்கணிக்கபட்டுவருகின்றனர்.

இது ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயமாகும்  இது பெரிய பாரபட்சம் எனவும் சங்கத்தின் தலைவர், அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X