2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2015 மார்ச் 30 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ. தாஜகான்

உலக நீர் தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான  விழிப்புணர்வு கருத்தரங்கு, அக் கல்லூரியின் கணினிக் கூடத்தில் இன்று (30) இடம்பெற்றது.  

இவ்வருடத்துக்கான உலக நீர் தினத்தின் தொனிப்பொருள் 'நீரும் நிலையான அபிவிருத்தியும்' என்பதாகும்.

இந்நிகழ்வில், நீரை எவ்வாறு சிக்கனப்படுத்தல், நீர் மாசடைவதை எவ்வாறு தடுத்தல், நீர் முகாமைத்துவத்தை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இக்கருத்தரங்குக்கு, பொத்துவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சிறிவர்த்தன, அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X