2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 மார்ச் 31 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல வருடகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள், நிரந்தர நியமனம் கோரி இன்று (31) காலை கிழக்கு மாகாணசபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று அவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, ஒரு மாத காலத்துக்குள் நிரந்தர தீர்வொன்றினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

முதலமைச்சரின் வாக்குறுதியை ஏற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X