Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 31 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ. தாஜகான்
இம்முறை வெளியான க.பொ.த சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பொத்துவில் உப வலய பாடசாலைகளில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.
இவ்வித்தியாலயத்தில் இம்முறை 18 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றி 18 பேரும் சித்தியடைந்துள்ளனர். இதில் ஏ.சி.எம். சாஜித் 9ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
பொத்துவில் உபவலய பாடசாலையின் உயர் பெறுபேறான 9ஏ சித்தி இப்பாடசாலையில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வரும் இப்பாடசாலையில், தமிழ் பாடத்தில் 100 சதவீத சித்தியும், வரலாறு பாடத்தில் 100 சதவீத சித்தியும், இஸ்லாம் பாடத்தில் 100 சதவீதசித்தியும், கணிதம் பாடத்தில் 95 சதவீதமும் விஞ்ஞானபாடத்தில் 73 சதவீத சித்தியும், ஆங்கில பாடத்தில் 56 சதவீத சித்தியும் பெற்று மாணவர்கள் சாதனை நிலை நாட்டியுள்ளனர்.
முதலாம் பெறுபேறு ஏசிம். சாஜித் 9ஏ, இரண்டாம் நிலை எம்.ஏ. சௌபியா 6ஏ2பீ1சீ, முன்றாம் நிலை ஏ.எஸ்.சஹ்பானத் 5ஏ2பீ2சீ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இ;வ்வெற்றிக்கு பங்களிப்பு செய்த ஆசிரியர்களையும், குறிப்பாக வழிகாட்டிய அதிபர் எம்.ஏ.சி றஹ்மத்துல்லாஹ், வகுப்பாசிரியர் எம்.எம்.அமினுல்லாஹ் ஆகியோருக்கும் நன்றிகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025