2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இரண்டாம் கட்ட ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மார்ச் 31 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸிறாஜ் ஏ மனீஹா

இரண்டாம் கட்ட ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை புதன்கிழமை (01) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக வலயக்கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி எஹ்சார் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக பிரிவில் 2012ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர  சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி க.பொ.த. உயர் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கே இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்ள தகமைபெற்றுள்ள  மாணவர்கள் தங்களது ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அடையாள அட்டையின் பிரதியை உரிய பாடசாலை அதிபர்களின் சான்று படுத்தலுடன் சமர்பித்து  புலமைப்பரிசில் நிதிக்கான காசோலையை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இது விடயமாக சகல பாடசாலை அதிபர்களுக்கும் கடித மூலம் அறிவித்துள்ளதாக வலயக் கல்வி அலுவலக கணக்காளர் றிஸ்வி எஹ்சார் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X