2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சீருடைகள், அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அறுகம்பை சுற்றுலாப் பிரதேச முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் நலன்புரி அமைப்புக்கான சீருடை மற்றும் சுற்றுலாப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, அல்-அக்ஸா வித்தியாலத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்றது.

அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.முஸம்மில் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் முயற்சியினால் சுற்றுலாப் போக்குவரத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அமைப்பொன்று 'அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி அமைப்பு' எனும் பெயரில் முறையாக பதிவு செய்து இயங்கி வருகின்றது.

அத்துடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதியொதுக்கீட்டில் இவர்களுக்கான சீருடை வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலகம் ஊடாக அமைப்பு பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டைகளும்; வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அறுகம்பை பிரதேசமானது சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். அந்த வகையில் சுற்றுலாப் போக்குவரத்து சேவையில் ஈடபட்டுவரும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான வசதி, வாய்ப்புக்களையும் முறையான தொழில் அனுமதியினையும் வழங்குவதற்கு உதவி செய்த மாகாண சபை உறுப்பினருக்கு அமைப்பின் தலைவர் ஏ.முஸம்மில், நன்றி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், நாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்பதிகாரி எம்.எம்.பஹ்ஜி மற்றும் தேசிய காங்கிஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்காண் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X