2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அரபுக்கல்லூரி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ், பைஷல் இஸ்மாயில்

பாலமுனை அல்-ஈமாணியா அரபுக்கல்லூரி அபிவிருத்தி தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று புதன்கிழமை (01) மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது இடம்பெற்ற நீண்டநேர கலந்துரையாடலின் பின்னர் அரபுக் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

இந்த கல்லூரியில் மார்க்க கல்வியுடன் பாடசாலைக் கல்வியையும் கற்று வரும் மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்சிக்கும் கல்லூரியின் பௌதீக வள அபிவிருத்திக்கும் தன்னால் முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக மாகாண சபை உறுப்பினர் இதன்போது உறிதியளித்தார்.

அல்-இமாணியா அரபுக் கல்லூரி பணிப்பாளர் சபை தலைவரும் ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளருமான ஏ.சாஹீல் ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அரபுக் கல்லூரி நிர்வாக சபை உறுப்பினரும் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக அமைப்பாளருமான எஸ்.எம்.எம்.ஹனிபா, கல்லூரியின் பிரதி அதிபர் அல்ஹாபிழ் நிஸ்தார், கல்லூரியின் செயலாளர் ஏ.ஆதம்பாவா, பொருளாளர் ஏ.உதுமாலெவ்வை(றசீட் ஹாஜி), உட்பட கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X