2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'எப்போதும் கிடைக்காத வெற்றியை தற்போது பெற்றுள்ளோம்'

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றிலிருந்து எமக்கு கிடைக்காத வெற்றி, இம்முறை எமக்கு கிடைத்திருக்கின்றது என்று அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.கே.முஹம்மட் இன்று தெரிவித்தார்.

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுகள் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 24 மாணவர்கள் தோற்றி அந்த 24 மாணவர்களும் சித்திபெற்று பாடசாலைக்கு ஒரு வரலாற்று சாதனையை படைத்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். விஷேடமாக அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளில் எமது பாடசாலை நூற்றுக்கு நூறு வீதம் சித்தியடைந்து முன்னிலை வகித்திருப்பதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வரலாற்று சாதனையை படைத்த பாடசாலையைப் பற்றி இன்று அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகள் மட்டுமல்ல,  அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், அஸ்ரப் நகர், திராய்க்கேணி, தைக்காநகர், அட்டாளைச்சேனை, தீகவாபி போன்ற பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களும் பேசுவதற்கு மிக முக்கிய காரண கருத்தாவாக இருந்த முன்னாள் அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் மற்றும் இதற்காக பாடுபட்டு உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் ஆகியோர்களுக்கே இந்தப் பெருமை சாரும்.

இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் நான் இந்த இடத்தில் மனதார பாராட்டி நன்றியினையும் தெரிவிக்கின்றேன் என்று பாடசாலையின் அதிபர் ஏ.எல்.கே.முஹம்மட் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X