Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தொழில் சங்கங்கள் தாம் சார்ந்த நிறுவனத்துக்கும் திணைக்களத்துக்கும் விசுவாசமாக செயற்பட வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனத்தின் இலக்கை அடைய முடியும் என்று அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தெரிவித்தார்
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் கல்விசாரா உத்தியோகஸ்தர்களுக்கான பொது கூட்டம் வியாழக்கிழமை (02) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்விக் கல்லூரியின் பதிவாளரும் தொழில் சங்கத்தின் தலைவருமான எஸ்.எம்.பஸீர் தலைமையில் கல்விக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பீடாதிபதி எம்.ஜ.எம். நவாஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது கல்லூரிக்கு கல்வி கற்க வந்த பயிலுநர் ஆசிரியர்கள் கல்வியை ஏனைய இடங்களுக்கு சென்று ஒழுக்கமான முறையில் கற்றுக் கொடுப்பதற்கு எமது கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்றும் எமது சங்கத்தினை ஒற்றுமை படுத்தி ஒரு பெரிய சங்கமாகவும் இந்த தொழில் சங்கத்தினால் இக்கல்லூரி மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.
தொழில் சங்கங்கள் ஒரு திணைக்களத்தின் வளர்ச்சி பாதைக்கு இன்றியமையாத ஒரு சக்தியாக செயற்படுகின்றார்கள். அந்த வகையில் எமது கல்லூரியின் தொழிற் சங்கம் ஏனைய நிறுவனங்களின் தொழில் சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025