2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காட்டு யானை தாக்குதலால் வீடு சேதம்

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில்; இன்று சனிக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலால் வீடொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் அப்பகுதி மக்கள், அச்சம் காரணமாக சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து செல்லக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அக்கிராமத்தில் வசித்து வரும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி கிராமத்துக்குள் இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் அங்குள்ள தென்னை, பாலா, மா, வாழை மரங்கள் மற்றும் வீட்டுத்தோட்டப் பயிர்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருவதுடன் வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

யானையின் தாக்குதலின் போது வீட்டிலிருந்த வீட்டு உரிமையாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X