2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'விளையாட்டின் நோக்கம் ஒற்றுமையை பலப்படுத்துவதாக அமைதல் வேண்டும்'

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

விளையாட்டின் நோக்கம், சாதி, மத, இன பேதங்களின்றி ஒற்றுமையை பலப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன், இன்று சனிக்கிழமை (04) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2015ஆம் ஆண்டுக்கான பிரதேசமட்ட எல்லே விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  தொடர்ந்து உரையாற்றுகையில்,

விளையாட்டுத்துறை என்பது மிகுந்த அர்ப்பணிப்புகளையும் கூட்டுப் பொறுப்பையும் நேர முகாமைத்துவத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.

இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் வருடா வருடம் பிரதேச செயலகத்தினால் நடத்தப்படுவது வெறுமனே காலததைiயும் நேரங்களையும் வீணடிப்பதற்காகல்ல.

எமது பிரதேசத்திலுள்ள இலை மறை காயாகவுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களது திறமைகளை  வெளிக்காட்டுவதற்கான ஒரு கழத்தினை அமைத்துக்  கொடுப்பதற்காகவுமே இவ்வாறான விளையாட்டுபோட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனை கழகங்களிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் புரிந்து கொண்டு தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதில் திறம்பட செயற்பட வேண்டும்.

விளையாட்டு என்பது வெற்றி,தோல்வி என்பவற்றுக்கு அப்பால் பொறுமை, பண்பு, ஒழுக்கம் எனும் உயரிய விடயங்களை கொண்டமைந்திருத்தல்; வேண்டும்.

எனவே, கழகங்களிலுள்ள ஒவ்வொருவரும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நல்லபண்புகளையும் ஒழுக்க விழுமியங்களையும் கடைப்பிடிப்பதுடன் தங்களது திறமைகளை முழுமையாக வெளிக்காட்டி வெற்றிபெற்று எமது பிரதேசத்துக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமையும் புகழும் சேர்க்க வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X