Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
எதிர்வரும் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட விரும்பும் பரீட்சகர்களுக்கான விண்ணப்பங்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.
தற்போது கல்வி அமைச்சுடன் சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் கடமை புரியும் ஆசிரியர்களும் கல்விப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரிகள், விடைத்தாள் திருத்துவதற்காக விண்ணப்பிக்கும் பாடத்தில் பட்டதாரியாக அல்லது டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தலும் உரிய முறையில் நிரந்தர நியமனம் பெற்றிருத்தலும் அவசியமாகும்.
பாடசாலையில் சேவையாற்றுவதாயின் க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் விண்ணப்பிக்கும் பாடத்தை கற்பிப்பவராகவும் வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவராயின் தற்போதுள்ள க.பொ.த.உயர்தர பாடத்திட்டம் தொடர்பான கல்வி ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகளுக்கு எதிராக தற்போது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் நடைபெறுமாயின், பரீட்சைக்கடமைகளிலிருந்து தடைசெய்யப்பட்டிருப்பின் அல்லது துணைவர்; துணைவியர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியிருப்பின் விடைத்தாள் பரீட்சகராக விண்ணப்பிக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூரணப்படுத்தப்பட்ட சகல விண்ணப்பப்படிவங்களையும் சான்றுபடுத்திய பின், பிரதியொன்றை வைத்துக்கொண்டு எதிர்வரும் 2015 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன் அவற்றை பட்டியல்படுத்தி பரீட்சை ஆணையாளர் நாயகம், இலங்கை பரீட்சைத்திணைக்களம், த.பெ.இல.1503 கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோர்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025