2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'தேசிய நூலக சபை நூல் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது'

Thipaan   / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சபை நாடளாவிய ரீதியில் எழுத்தாளர்களை ஊக்கவித்து நூல் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தேசிய நூலக ஆவணமாக்கல் சபையின் கல்விப் பிரிவின் தலமை அதிகாரி ஏ.டபிள்யூ. அரவிந்த, இன்று ஞாயிற்றுக்கிழமை (05)  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட எழுத்தாளர்களுக்கான செயலமர்வு கலாசார உத்தியோகத்தர் வை.கே.ஏ. சமந்த தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே தலைமையதிகாரி ஏ.டபிள்யூ. அரவிந்த மேற்கண்டவாறு கூறினார்.

தலைமையதிகாரி தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டிலுள்ள எழுத்தாளர்கள் தமது நூல்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை வெளியிடுதல் தொடர்பில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சபை நாடளாவிய ரீதியில் இவ்வாறான செயலமர்வை நடத்தி வருகின்றது.

எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிடும் போது நூல்களை தயாரிக்கும் வழிமுறைகள், அட்டைப்படம் தயாரித்தல், நூலை அச்சிடுதல், நூலை வெளியீடு செய்தல் போன்றவற்றுக்கான ஆலோசணைகளையும் நிதியுதவிகளையும் தேசிய நூலக ஆவணமாக்கல் சபை வழங்கி வருகின்றது.

எதிர்காலத்தில் நூல்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள் தேசிய நூலக ஆவணமாக்கல் சபையிடம் தொடர்பு கொண்டு தங்களது நூல்களை இலகுவாக வெளியிட முடியும் என்றார்.

நூல் வெளியீட்டின் போது ஐ.எஸ்.பி.என். இலக்கத்தை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X