2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதில் எந்த தயக்கமும் இல்லையென நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீமுக்கும் சாய்ந்தமருது அபிவிருத்தித் திட்டமிடல் குழுவுக்குமிடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (05)   சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றக் கோரிக்கை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு யாது? என ஊடகவியலாளர் ஒருவரால் வினவப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தனியான உள்ளூராட்சி மன்றம் என்றால், அதனை நிறைவேற்றி வைப்பதில் எந்த தயக்கமும் காட்டப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை அமைச்சர் வழங்கினார்.

இதேவேளையில் தினம் தினம், புதுப்புதுச் சர்ச்சைகளை உருவாக்கிவரும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் பிரச்சினை தொடர்பாக, அமைச்சர் ஹக்கீமிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. அதனை செவிமடுத்த அமைச்சர், இது தொடர்பில் முதலமைச்சருடனும் பேசி விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகளுக்கும் சாய்ந்தமருது அபிவிருத்தித் திட்டமிடல் குழுவுக்குமிடையில், துரிதமாக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அதனூடாக விரைவான அபிவிருத்திகளை மேற்கொள்வதென இதன்போது இணக்கம் காணப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X