2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்துக்கான விசாரணை திங்கட்கிழமை (06),  கல்முனையில் ஆரம்பமானது

ஆணைக்குழு முன்  சாட்சியமளிக்க 112 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர் .

இதன்போது, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் இது காலத்தை இழுத்தடித்து தங்களை ஏமாற்றுவதற்கான முயற்சி என்றும் தெரிவித்து கறுப்புத்துணியால் தங்களது வாய்களை கட்டி கல்முனை பிரதேச செயலகத்துக்க முன்னால் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் கல்முனை பிரதேச செயலக தமிழ் பிரிவில் இவ்விசாரணைகள் தொடங்கின.

முன்னதாகவே விண்ணப்பித்து சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர், படுகொலை செய்யப்பட்டோர் உறவினர்கள் அமையத்தின் சார்பாக விசாரணை ஆணைக்குழுவின் முன் பிரசன்னமாகிய அடிகளார் ஏ. கமலகுமார் தலைமையிலான செயற்பாட்டாளர்கள் ஆணைக்குழுவிடம் இந்த ஆணைக்குழு விசாரணை கண்துடைப்பானது என்றும் இதற்குப் பதிலாக சர்வதேச விசாரணை கோரி நிற்பதாகவும் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X