2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விஞ்ஞான தாதி பட்டப்படிப்புக்கான பீடம் ஆரம்பிக்க நடவடிக்கை

Gavitha   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான தாதிப்பட்டப் படிப்புக்கான   பீடமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (05) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி, நடாளுமன்ற  உறுப்பினர் பைசால் காசிம் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் கலந்துரையாடினார்.

இதன்போது, சுகாதார அமைச்சின் கல்விப் பயிற்சி ஆராய்ச்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுனில் டி அல்விஸ், தாதி கல்விப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் கேர்ணல் எஸ். சிறிவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டு விஞ்ஞான தாதிப்பட்டப் படிப்புக்கான  பீடமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலான விடயங்கள் பற்றி ஆராய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X