2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சுயதொழில் மானிய கொடுப்பணவு

Kogilavani   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் கல்முனை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பம்களுக்கான சுயதொழில் மானிய கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (08) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

தெரிவுசெய்யப்பட்ட ஐந்து  குடும்பம்களுக்கு தலா 30,000 ரூபாய் வீதம்;  150,000 ரூபாய்  கொடுப்பணவு வழங்கப்பட்டது.

சமூக சேவை பிரிவின்  அபிவிருத்தி உத்தியோகத்தார்  எம்.ஐ.ஹபீபாவின்  ஒருங்கினைப்பில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்கரமாராட்சி, சமூக சேவை உத்தியோகத்தார் ரீ.அன்சர், கிராம உத்தியோகத்தார் பீ.பௌசுல்  லிகாஸ்  உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X