Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி திணைக்களத்தின் (National Enterprises Development Authority) பணிப்பாளராக அக்குரணை முஹ்லிஸ் வஹாப்தீன், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் புதன்கிழமை (08) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சுவிட்சர்லாந்தில் இயங்கிவரும் SHAMAAZ GMBH கம்பனியின் பணிப்பாளருமாவார். கிராம மட்டத்தில் பள்ளிகளை மையப்படுத்தி கல்வி மேம்பாட்டுக்காக தனது பங்களிப்பை வழங்கி வருவதோடு சமூக சேவையில் ஆர்வமுள்ளவராகவும் காணப்படுகிறார்.
குறிப்பாக கல்வி அபிவிருத்திப் பணிகளில் பல வருட காலங்களாக மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இவர், தனது பாடசாலைக் கல்வியை அக்குறணை அஸ்ஹர் கல்லூரியில் கற்ற பின், தனது உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் (வெளிவாரி மாணவனாக) கற்றுக் கொண்டிருந்த வேளையில் சுவிட்ஸர்லாந்துக்கு வியாபார நோக்கமாக சென்றார்.
அங்கிருந்தவாறே தனது உயர்கல்வியை நிறைவு செய்து ஜெனீவாவில் இயங்கி வரும் பல சமூக சேவை நிறுவனங்களின் அங்கத்தவராக கடமையாற்றினார்.
ஜெனீவாவில் வாழும் இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அக்குரணை அஸ்ஹர் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் முன்னாள் அக்குரணை பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம். வஹாப்தீனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago