2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இளைஞர்கள் திகழ்கின்றனர்

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

'ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்கின்ற இளைஞர்கள், சமூகத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து செயற்பட வேண்டும். சமாதானதுக்கான பாதையை முன்னெடுத்து செல்பவர்களாகவும் இருக்க வேண்டும்' என அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் வருடாந்த பொது கூட்டம் புதன்கிழமை(8) இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான யூ.எல்.சபிர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனம்,  அட்டாளைச்சேனை, பாலமுனை, ஓலுவில், ஆலங்குளம், தீகவாபி போன்ற பிரதேசங்களில் மூவின சமூகங்களையும் சேர்ந்த 44 இளைஞர் கழகங்களையும் பிரதிநிதிதுவப்படுத்துகின்ற சம்மேளனமாக காணப்படுகின்றது.

இதன்போது 2015ஆம் ஆண்டுக்கான 21 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது. மீண்டும் தலைவராக முன்னாள் தலைவர் யூ.எல்.சபிர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர் யூ.எல்.மஜீட், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.நளிரா, எம்.எம்.நாஸிர் அலி, கழகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X