2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சிங்கள தினப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

2015ஆம் ஆண்டு அக்கரைப்பற்று வலய மட்டத்தில் இடம்பெற்ற சிங்கள தினப்போட்டியில் வெற்றி பெற்ற சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (09) பாடசாலை விஷேட ஆராதணை நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எம்.எச்.அப்துர் றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களான ஐ.எல்.எம்.பாயிஸ், எம்.ஐ.சாமிலா, எம்.ஏ.சீ.உவைத்துல்லா ஆகியோரினால் 2015ஆம் ஆண்டு சிங்கள தின போட்டியில் வெற்றிபெற்ற எப்.ஐ.பறூஸா, எம்.மபாஸா, ஏ.ஆர்.றிஸ்கா ஆகிய மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X