2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பள்ளியடி வட்டை வாய்க்காலை புனரமைக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை பொத்துவில் இறத்தல் பள்ளியடி வட்டை பிரதான பாய்ச்சலுக்குரிய வாய்க்காலை புனரமைத்துத் தருமாறு கோரி, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவத்துக்கு, பள்ளியடிவட்டை விவசாய அமைப்பு மகஜர் ஒன்றை வியாழக்கிழமை (09) அனுப்பி வைத்துள்ளது.

இறத்தல் பள்ளியடி வட்டை விவசாய அமைப்பின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளருமான  என். றிஸ்வியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொத்துவில் இறத்தல் பள்ளியடிவட்டை வயலுக்குரிய பிரதான பாய்ச்சலுக்குரிய வாய்க்கால் கடந்த பயங்கரவாத காலத்தின் போது,  பாதிப்படைந்த நிலையில் சுமார் 20 வருடங்களை தாண்டியுள்ளது.

இந்த விடயமாக பல்வேறு தரப்பினரிடமும் எடுத்துக்கூறியும் எதுவித நடவடிக்கை மேற்கொண்டதாகவோ நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.

கடந்த போகத்தில் விவசாய நடவடிக்கைளுக்காக விவசாய அமைப்பினால் பிரதான வாய்க்காலை மிக கஷ்டப்பட்டு மண்மூடை அமைத்து தண்ணீரை தேக்கி வயல் நிலங்களுக்கு பாய்ச்ச வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

தற்போது சிறுபோக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதால்  பள்ளியடி வட்டை பிரதேச வயல் பிரதேசத்தில் முற்றாக நெற்செய்கையை மேற்கொள்ள  முடியாதுள்ளது.

இந்த வாய்க்காலை புனரமைத்து வழங்கும் பட்சத்தி;ல் சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்களில் இரு போகங்கள் தடையின்றி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் சுட்டிக்காட்டகின்றனர்.

எனவே சேதமடைந்துள்ள குறித்த விவசாய பாய்ச்சலுக்குரிய வாய்க்காலை சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்காக அரசின் 100 நாட்கள் திட்டத்தின் கீழ் புனரமைத்துத் தருமாறு பள்ளியடிவட்டை விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்வதாக அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X