Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அரசாங்கத்தின் 100 நாட்கள் துரித வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலைமைப்புச்சபை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக்கான வரைவு தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல், அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பொது விளையாட்டு மைதானம், கடற்கரை பூங்கா, வாவிக்கரையோரம், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கென பூங்கா அமைத்தல், சந்தை சதுக்கம் மற்றும் புதிய பிரதேச சபை கட்டடம் போன்ற அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்களைப் பார்வையிட இக்குழுவினரால் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் யூ.எல்.எம்.எல்.முபீன், அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலைமைப்புச்சபை யின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
9 minute ago
17 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
26 minute ago
31 minute ago