2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ் வேலைத் திட்டங்களை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு பொது மக்கள், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்போது தான் அதன் இலக்கை அடையலாம் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

உலக சுகாதார தினத்தையொட்டி சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டத்துக்கு அமைவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுடனான உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, வெள்ளிக்கிழமை(10) அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றபோது அவர' இதனை கூறினார்.

நாங்கள் மக்களுக்கு வழங்குகின்ற உணவுகளை சத்தமாகவும், சுகாதாரமானதும் வழங்க வேண்டும். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்வரும் நாட்களில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகள், தேனீர் கடைகள் என்பவற்றில் சோதனை மேற்கொள்ளப்படும். இதற்கு நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீதி ஓரங்களில் உணவுகளை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மட்டத்தில் உணவு பரிமாறும் நிலையங்களை சோதனையிட்டு மூன்று சிறந்த நிலையங்கள் தெரிவு செய்யப்படுவதுன் பிராந்திய, மாகாண, தேசிய மட்டத்தில் பரிசில்கள் வழங்கப்படும் என்றார்.

இச் செயலமர்வில் அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் எம்.ஏ.அன்சில், சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.ஏ.ஜௌபர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்களும் மற்றும் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட உணவகங்களின் உரிமையாளர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X