Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
ஒரு நாட்டின் தேசியம் சிறந்த அடித்தளத்துடன் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால், அங்கு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 505 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசாக்குப் பொதிகள் சனிக்கிழமை (11) வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு திட்டத்தை அவர் முன்மொழிந்தமையை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
அன்றைய ஆட்சியாளர்களால், அவரால் முன்மொழியப்பட்ட அந்த நல்ல திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இன்று அவர் ஜனாதிபதியாக இந்த நாட்டில் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், இந்த நாட்டில் நல்லாரோக்கியமுள்ள சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அந்தக் கனவு இன்று நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளதை எண்ணி சந்தோசமடைகின்றேன்.
ஒரு நாடு சிறந்த கல்வியியலாளர்களையும் நல்ல கண்டுபிடிப்பாளர்களையும் கொண்ட நாடாக விளங்க வேண்டுமென்றால் அங்கு ஆரோக்கியமான சமூகம் காணப்பட வேண்டும்;.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அந்த கருத்தக்கு அமைவாக ஒரு குழந்தையை தாயின் கருவில் உருவாகும் போதே ஆரோக்கியமான குழந்தையாக உருவாக்கி. ஆரோக்கியமான ஒரு சமூகமாக கொண்டுவருவதன் மூலம் நாட்டுக்கான எதிர்கால சமுதாயத்துக்கான நிலையான வளமான ஒரு சமூகமாக அவர்களை மாற்றிக் கொள்ள முடியும்.
இன்று அரசாங்கம் அதிகளவான நிதியொதிக்கீட்டை மேற்கொண்டு கர்ப்பிணித் தாய் மற்றும் பாலூட்டும் தாய் மார்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்களை கொண்டுவரும நோக்கில் இத்திட்டத்தை நாடு பூராகவும் அறிமுகப்படுத்தி மேற்கொண்டு வருகின்றது.
இத்திட்டமானது அரச தொழில் புரிகின்றவர்கள், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து கர்பிணித்தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய் மார்களுக்கும் போசாக்கு உணவுப் பொhருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago