Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யும் படியோ அல்லது ஆணைக்குழுவில் பதியும் படியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறவில்லை. மக்களின் இயலாமையை பயன்படுத்தி சிலர், ஆனைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதாக கூறப்பட்டு பொதுமக்கள் 10ஆம் திகதி வரவழைக்கப்பட்டு, பின்னர் பதிவுகள் இடம்பெறாமல் வந்தவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஒரு குழுவினர் திடீரென முளைத்து காணாமல் போனோர் சம்மந்தமாக பதிவுகள் இடம்பெறும் இடங்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனால் மக்களுக்கு காணாமல் போனோர் சம்மந்தமான பதிவுகளை மேற்கொள்வதற்கு முடியாமல் இருப்பதாக மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முறையாக பதிவுகள் இடம்பெறவில்லை. ஆனால் நாங்கள் ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் இந்த காலகட்டத்தில் பதிய வேண்டிய கட்டாயம் இருந்தது. எனினும் இவ்வாறான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை செய்து மக்களை பதியவிடாமல் தடுப்பதனால் மக்களின் நீதி முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
பதிவுகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் செய்யவேண்டும். வெறுமனே தொண்டு நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு தாங்கள் இலாபம் தேடுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மக்களை தொடர்ந்து ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் நான் தயங்கமாட்டேன் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago