2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் உணவகங்கள் சோதனை

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இன்று வியாழக்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

உலக சுகாதார தினத்தையொட்டி சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்துக்கு அமைய இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின்போது, பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை வைத்திருந்த சில உணவகங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும்,  சில உணவகங்கள் இரண்டு வருட காலத்துக்குள் துப்பரவு செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனை  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X